Thanjavur Tourism Promotion Council

தமிழ் English हिंदी
Image of அம்மன்.

சிற்பத்தின் தலைப்பு: அம்மன்.

கல்/உலோக சிற்பம்: வெண்கலம்.
அளவீடு (C. Ms. இல்): 62 செ.மீ.
கையகப்படுத்தப்பட்ட தேதி: 19-1-91
காலம்: கி.பி.12 ஆம் நூற்றாண்டு
சிற்பத்தின் விளக்கம்:

எளிய சதுர வடிவில் பத்ரபீடத்துடன் இணைக்கப்பட்டு இச்சிற்ப்பம் அபங்க வடிவத்தில் பத்மபீடத்தின் மீது நிற்கிறது, பத்ரபீடம் வளையங்களுடன் கரந்தமகுடாமும், சூடாமணியும் முன்பக்கத்திலும் மற்றும் பக்கங்களிலும், இணைக்கப்பட்டுள்ளது. நடுவில் பத்மத்தால் வடிவமைக்கப்பட்ட சிரச்சக்கரமும் தொங்கவிடப்பட்டுள்ளது. தலைமுடியில் எட்டு வளையங்கள் அரை வட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. காதுகளில் மகர குண்டலங்கள்; கழுத்தில் பாசிமாலை; திரு உட்பட நான்கு கழுத்தணிகள்; இருபுறமும் அகன்ற முஹாப்பூவுடன் பின்புறத்தில் தொடரும் ஒரு கழுத்தணி; ஒரு பதக்கத்தை சுமக்கும் கடைசி கழுத்தணி; முலைக்காம்புகளுடன் கூடிய மார்பகங்கள்; இரண்டு திரிக்கப்பட்ட பூ நூல்கள் மேல் செல்கிறது; ஒன்று தடிமனாகவும் மற்றொன்று மெல்லியதாகவும் பின்புறத்தில் தொடர்கிறது; வலது கைகயில் வளையல்களும்; இடது கைகயில் கோவால –கைபட்டையும்; ஒரு கைக்கவசம் மற்றும் மூன்று மணிக்கட்டுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன; ஆடைகளில் வட்ட வடிவ மலர் வடிவங்களுடன் பொறிக்கப்பட்டுள்ளது. மூன்று சரங்களில் பாதசாரங்கள் கால்களை அலங்கரிக்கின்றன.

No time to read?
Just hear it!