Thanjavur Tourism Promotion Council

தமிழ் English हिंदी
Image of ரூத்ர-தாண்டவர்

சிற்பத்தின் தலைப்பு: ரூத்ர-தாண்டவர்

கல்/உலோக சிற்பம்: வெண்கலம்.
அளவீடு (C. Ms. இல்): 39.4 செ.மீ பீடம் இல்லாமல்: 30.5 செ.மீ
கையகப்படுத்தப்பட்ட தேதி: 4-12-72
காலம்: கி.பி.17-18 ஆம் நூற்றாண்டு.
சிற்பத்தின் விளக்கம்:

சதுர பத்ரபீடத்துடன், கோளவடிவ பத்மபீடத்தில் இணைக்கப்பட்டடுள்ளது இடது காலை அரக்கனை நசுக்கி நடனம் ஆடும் தோரணையில் அமைந்துள்ளது. குதிரைக் காலணி வடிவம் கொண்ட பிரபவலியில் இருபத்தி ஏழு தீப்பிழம்புகளைக் கொண்டுள்ளது. மேலே மூன்று தீப்பிழம்புகள் தனித்தனியாக உள்ளன-வலது கால் தலை மட்டம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இறகுகளுடன் வடிவமைக்கப்பட்டா மகுடம் அணிந்துள்ளார். நாகம், பிறை நிலவு, மற்றும் உமத்தம் பூ உள்ளன. ஜடா முடி பதின்மூன்றாக பிரிந்து ஒவ்வொரு பக்கத்திலும் விசிறி போல விரிந்துள்ளது, ஒவ்வொரு வரிசையின் இடைவெளி பூக்களால் நிரப்பப்பட்டுள்ளன. இடது காதில் பெரிய பர்தகுண்டலமும், இரண்டு கழுத்தணிகள் மற்றும் மூன்று திரிக்கப்பட்ட இழைகளின் பூ நூல்களும், உதாரபந்தம் வயிற்றின் மேல் மிக உயரமாக வைக்கப்பட்டுள்ளது.

No time to read?
Just hear it!