Thanjavur Tourism Promotion Council
ஆனந்த தாண்டவ நடனம் ஆடும் தோரணையில் அமைந்துள்ளது. இடது கால் இடுப்புக்கு மேல் உயர்த்தப்பட்டு மேலும் கால்கள் முன்னோக்கி வீசப்படுகிறது. தலை மற்றும் உடற்பகுதி சற்று பின்னோக்கி உள்ளது. நெற்றிக்கண், புருவங்கள், கண் இமைகள் மற்றும் கண் கருவிழிகள் தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளன. ஜடா முடிகள் பறக்கும் போலுது அலை அலையான ஒவ்வொரு பக்கத்திலும் எட்டு என்ற எண்ணிக்கையில் உள்ளன. கழுத்தின் முனையில் பதின்மூன்று வட்ட வடிவிலான முடிபூட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன, மேலும் கங்கா தேவி, மூன்றாவது மற்றும் ஐந்தாவது ஜடா முடிகளின் இடையில் வலதுபுறத்தில் அஞ்சலி போன்ற தோரனையில் கடவுளை நோக்கி அமர்ந்திருக்கிறது. சிரச்சக்ராவில் பன்னிரண்டு அரை வட்ட வடிவத்தில் முடி பூட்டுகள் உள்ளன. இரண்டு தனித்து நிற்கும் பூ நூல்கள் உள்ளன. ரத்தினங்களால் அலங்க்ரிக்கப்பட்ட இடுப்புபட்டையும். உடுக்கை மற்றும் நாக பாம்பு அபய கைகளை சுற்றியுள்ளது. முயலகா உடுக்கை மற்றும் நாகப்பாம்பை வைத்திருக்கிறார். பிரபாவலியில் மொத்தம் முப்பத்தாறு நெருப்புச் சுடர்கள் உள்ளன.
No time to read?
Just hear it!