Thanjavur Tourism Promotion Council

தமிழ் English हिंदी
Image of சிவகாமி.

சிற்பத்தின் தலைப்பு: சிவகாமி.

கல்/உலோக சிற்பம்: வெண்கலம்.
அளவீடு (C. Ms. இல்): 3’ 1’’
கையகப்படுத்தப்பட்ட தேதி: 30-6-1981
காலம்: கி.பி.11 ஆம் நூற்றாண்டு
சிற்பத்தின் விளக்கம்:

பத்ரபீடத்தில் இரண்டு அடுக்குகளை கொண்டு பத்மபீடத்தின் மேல் அபங்க வடிவில் நிற்கின்றது இச்சிலை. கரண்டமகுடாவுடன், சூடாமணி முன் மற்றும் பக்கங்களில் இணைப்பதற்காக பத்ரபீடதில் இருந்து துளை அமைக்கப்பட்டுள்ளது. சக்கரம் போன்ற வடிவில் ஆன சிரஸ்சக்ரா நடுவில் தொங்க விடப்பட்டுள்ளது. நெற்றியில் அகலமான் நெற்றிச்சுட்டி ஆகியவை உள்ளன. கண்கள்,புருவங்கள் நேர்தியாக குறிக்கப்பட்டுள்ளது. காது மடல்களில் பெரிய மகரகுண்டலங்கள் உள்ளன. இரண்டு தோள்பட்டைகளிலுன் கோர்க்கப்பட்ட மணிக்களும்; திரு மற்றும் ஆரம் கொண்ட இரண்டு கழுத்தணிகள்; இரண்டு திரிந்த பூ நூல்களும் பின் பக்கம் வரை செல்கின்றது. அடிவயிற்றின் திரி-வேலி அடையாளங்கள் காட்டப்படுகின்றன. அலங்காரமான கடினமான சரிகைகள் கொண்ட ஆடை; இடையில் இருந்து குஞ்சங்கள் தொடையில் தொங்கவிடப்பட்டுள்ளன.உறுதியான வடிவமைப்பு கொண்ட ஆடையின் நடுவில் இருந்து மடிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. மார்பகங்கள் குறிக்கப்பட்டுள்ளன. இறுக்கமான கைக்கவசம் மற்றும் மணிக்கட்டில் சங்கிலி போன்று அணியும் கையணி; வலது கையில் வளையல்களும் : இடது கையில் கோவாலாவும் தலைமுடியில் பன்னிரெண்டு வளையங்கள் அரை வட்டத்திலும் கச்சா மடிப்புகளுடன் அமைக்கப்பட்டிருக்கிறது.

No time to read?
Just hear it!